கிரிக்கெட் (Cricket)

கிங்-ஐ தூக்கி வீசிய செஸ் வீரர்- தரமான பதிலடி கொடுத்த குகேஷ்- வைரலாகும் வீடியோ

Published On 2025-10-28 14:44 IST   |   Update On 2025-10-28 14:44:00 IST
  • சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார்.
  • வெற்றி பெற்ற பிறகு குகேஷின் ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த குகேஷ் முதல் போட்டியில் கார்ல்சனுடன் தோல்வியடைந்து மோசமான தொடக்கத்தை கொடுத்தார். இதனையடுத்து நகமுரா மற்றும் கருவானாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் அவர் வலுவாக மீண்டு வந்தார்.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு அவரது ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார். இதை பார்த்த குகேஷ், சிரிப்புடன் அதனை கடந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு, ரூ.1.05 கோடி பரிசு கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.78 லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.62 லட்சமும் பரிசாக கிடைக்கும்.

Tags:    

Similar News