கிரிக்கெட் (Cricket)
அஸ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக உருவாக்கிய CSK - டிரெய்லர் வெளியீடு
- அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
- அஷ்வினின் ஆவணப்படம் நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது
இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாளை சிஎஸ்கே யூடியூப் சேனலில் இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று IPL, TNPL போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.