Recap: 2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடந்த சுவாரஸ்ய தகவல்
- 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
- 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
10-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.
கவுதம் கம்பீர் (97 ரன்), கேப்டன் டோனி (91 ரன்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் வெற்றிக்கு வித்திட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 2) இந்தியா உலகக் கோப்பையை ருசித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்த உலகக் கோப்பையில் ஆடிய இந்திய வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், இறுதிப்போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. எம்.எஸ். தோனி மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் முதல் முயற்சியிலேயே டாஸை வென்றதாக நினைத்தனர்.
சங்கக்காராவின் அழைப்பை கேட்கவில்லை என்று நடுவர் ஜெஃப் குரோவ் கூறினார். இதனால் டாஸ் மீண்டும் போடப்பட்டது. ஐசிசி இறுதிப்போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்த போட்டியில் மட்டும் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.