கிரிக்கெட் (Cricket)
வங்கதேசம் தொடர் ஒத்திவைப்பு: இலங்கையுடன் ஒயிட் பால் தொடரில் விளையாடும் இந்தியா..!
- இந்திய அணி வங்கதேசம் சென்று விளையாட இருந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இலங்கை சென்று விளையாட பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய அணி வங்கதேசம் சென்று ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது. தற்போது இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா விரும்புகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இரு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், ஆகஸ்ட் மாதம் மத்தியில் விளையாட வாய்ப்புள்ளது.