கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடர்: துணை கேப்டன் பதவியை இழக்கும் பும்ரா?

Published On 2025-05-05 15:02 IST   |   Update On 2025-05-05 15:02:00 IST
  • இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது.
  • இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர் மே 25-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் செயல்படுவதாக முடிவாகி உள்ளது. மேலும் இந்த தொடருக்காக இந்திய அணியில் குல்தீப் யாதவ், கருண் நாயர் டெஸ்ட் அணியில் இடம் பெறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிந்தார். மேற்கொண்டு ரோகித் சர்மா பங்கேற்காத போட்டிகளுக்கு பும்ரா கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் அத்தொடாரின் கடைசி போட்டியின் போது கேப்டனாக செயல்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தை சந்தித்ததுடன் போட்டியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.

மேற்கொண்டு காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் அவர் தவறவிட்டார். அப்போதே பும்ரா தொடர்ந்து விளையாடியதன் காரணமாகவே காயத்தை சந்தித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் இனிவரும் தொடர்களில் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடவைப்பதற்கு பதிலாக முக்கிய ஆட்டங்களில் மட்டும் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அவரை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கவுள்ளதாகவும் அதேசமயம் இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டுவரும் சுப்மன் கில்லை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News