கிரிக்கெட் (Cricket)

2வது டி20 போட்டியில் 3-வது வரிசையில் அக்ஷர் படேல் ஏன் களமிறங்கினார்! - திலக் வர்மா விளக்கம்

Published On 2025-12-14 11:45 IST   |   Update On 2025-12-14 11:45:00 IST
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது.
  • சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூ சண்டிகரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

நாளைய போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை பெறப் போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முன்னிலை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியையொட்டி இந்திய வீரர் திலக் வர்மா பேட்டி அளித்தார். அப்போது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து எந்த வரிசையிலும் களம் இறங்கி விளையாட வீரர்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திலக் வர்மா கூறியதாவது:-

அணியில் உள்ள தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் எந்தவரிசையிலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார்கள். நான் 3, 4, 5, அல்லது 6-வது வீரராகவும் களமிறங்கி ஆட தயாராக இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கு ஒரு முடிவு சிறந்ததாக இருக்கும் என அணி நிர்வாகம் உணரும் போது அனைவரும் அணி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் நடந்தது போன்று ஏற்கனவே நடந்து இருக்கிறது. அக்ஷர் படேல் இதற்கு முன்பு முன்னதாக களம் இறக்கப்பட்டு சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஆட்டத்தின் சூழலைப் பொறுத்தே அணி நிர்வாகத்தின் முடிவுகள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆட்டத்தில் அக்ஷர் படேல் 3-வது வீரராக ஆடியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்தே திலக் வர்மா இந்த விளக்கத்தை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News