கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை: ரிஸ்வான், சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளிய ஆஸ்திரிய வீரர்

Published On 2025-10-25 03:26 IST   |   Update On 2025-10-25 03:26:00 IST
  • கரன்பீர் சிங் இந்த ஆண்டில் 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.
  • ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை படைத்தார்.

வியன்னா:

ஆஸ்திரியா அணி ருமேனியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஆஸ்திரியா வெற்றி பெற்றதுடன், 3-1 என தொடரைக் கைப்பற்றியது.

இதில் முதலாவது ஆட்டத்தில் 57 ரன் எடுத்த ஆஸ்திரிய தொடக்க ஆட்டக்காரர் கரன்பீர் சிங் 2-வது ஆட்டத்தில், 90 ரன்னும், 3-வது ஆட்டத்தில் 74 ரன்னும், கடைசி ஆட்டத்தில் 27 ரன்னும் எடுத்து அசத்தினார்.

இந்நிலையில், கரன்பீர் சிங் இந்த ஆண்டில் இதுவரை 32 ஆட்டத்தில் ஆடி 2 சதம், 13 அரைசதம் உள்பட 1,488 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து உலக சாதனை

படைத்துள்ளார்.

முதல் இரு இடத்தில் இருந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (2021-ம் ஆண்டில் 1,326 ரன்), இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (2022-ம் ஆண்டில் 1,164 ரன்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார்.

Tags:    

Similar News