null
கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
- இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
சிட்னி:
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்சில் 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.119 ரன்கள் முன்னிலை பெற்றது.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. சிறப்பாக விளையாடி வந்த பெத்தேல் 154 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 88.2 ஓவர்களில் 342 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 160 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. இந்த இலக்கை எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டை இழந்தது.
தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 29 ரன்னிலும், வெதரால்டு 34 ரன்னிலும் ஜோஷ் டங் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள்.
அடுத்து லபுஷேன் 37 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் சுமித் 12 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 121 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரி-கேமரூன் கிரீன் ஜோடி அணிைய வெற்றிக்கு அழைத்து சென்றது. ஆஸ்திரேலியா 31.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகனாக டிராவிஸ் ஹெட்டும் தொடர் நாயகனாக ஸ்டார்க்கும் தேர்வு பெற்றனர். அத்துடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.