கிரிக்கெட் (Cricket)

இதுக்கு இல்லையா சார் ஒரு END... தொடர்ந்து 18-வது முறையாக டாசில் தோற்ற இந்திய அணி

Published On 2025-10-25 10:27 IST   |   Update On 2025-10-25 10:27:00 IST
  • இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது.
  • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த டாஸ் தோல்வியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 18-வது முறையாக இந்திய அணி டாஸை தோற்றுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News