கிரிக்கெட் (Cricket)

ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் அதிக ரன்கள் - கோலி சாதனையை முறியடித்த பதும் நிசங்கா

Published On 2025-09-27 13:22 IST   |   Update On 2025-09-27 13:22:00 IST
  • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
  • பதும் நிசங்கா 12 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் ஆசியக் கோப்பை டி20 வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் வீராட் கோலியை முந்தி பதும் நிசங்கா புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 429 ரன்கள் குவித்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது. தற்போது பதும் நிசங்கா 12 போட்டிகளில் விளையாடி 434 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

அபிஷேக் ஷர்மா 6 போட்டிகளில் விளையாடி 309 ரன்கள் குவித்து இப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்துள்ளார். 

Tags:    

Similar News