கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை Face off: வெறித்தனமான இறுதிபோட்டி - பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

Published On 2025-09-28 17:53 IST   |   Update On 2025-09-28 17:53:00 IST
  • சூப்பர்-4 சுற்று போட்டி யின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண் பித்தனர்.
  • சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது.

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்க ளில் சர்ச்கைகள் எழுந்தது. லீக் போட்டியின்போது ஆட்டம் முடிந்தபிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் புகார் செய்தது.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) புகார் செய்தது.

சூப்பர்-4 சுற்று போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண்பித்தனர்.

இதுதொடர்பாக சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் செய்தது. இப்புகார் களை விசாரித்த ஐ.சி.சி, சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது. பர்ஹானுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. இந்த சர்ச்கைகளுக்கு மத்தியில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டனுடன் கோப்பை புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.

இறுதிப் போட்டிக்கு முன் அதில் மோதும் அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் புகைப்ப டத்துக்கு போஸ் கொடுப் பார்கள். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டதாக கூறப்படு கிறது.

இதனால் கோப்பை புகைப்பட நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்திய அணி நேற்று ஒரு நாள் விடுமுறை எடுத்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News