கிரிக்கெட் (Cricket)

VIDEO: விக்கெட்டான விரக்தியில் பாகிஸ்தான் வீரரை பார்த்து வைபவ் சூர்யவன்ஷி செய்த செயல் வைரல்

Published On 2025-12-22 12:18 IST   |   Update On 2025-12-22 12:18:00 IST
  • U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
  • இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

துபாயில் நடந்த U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தியா அணி பேட்டிங் செய்த போது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "நீ என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தார்.

மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. வெறும் 14 வயதான வைபவ் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது ஓவரில் 3 சிக்சர் அடித்த பேட்டரின் விக்கெட்டை வீழ்த்தும் போது எந்தவொரு பந்து வீச்சாளரும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள் அதைதான் அவரும் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

Tags:    

Similar News