கிரிக்கெட் (Cricket)
null

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு

Published On 2024-12-18 11:26 IST   |   Update On 2024-12-18 17:16:00 IST
  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
  • இந்த போட்டி முடிந்த பிறகு தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.

பிரிஸ்பேன்:

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி 2-வது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இன்று 5-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும் பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்தார்.

அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News