கிரிக்கெட் (Cricket)
விஜய் ஹசாரே கோப்பை: அதிக ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த புதுச்சேரி கேப்டன்
- விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதுச்சேரி- ஜார்கண்ட் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் ஜார்கண்ட் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் (ஏ பிரிவு) நடந்த புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்கண்ட் 7 விக்கெட்டுக்கு 368 ரன்கள் குவித்தது.
கேப்டன் குமார் குஷாக்ரா 105 ரன்களும், அனுகுல் ராய் 98 ரன்களும் எடுத்தனர். இமாலய இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 41.4 ஓவர்களில் 235 ரன்னில் அடங்கி தோற்றது.
முன்னதாக புதுச்சேரி கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான 29 வயதான அமன் கான் 10 ஓவர்களில் 123 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் (சர்வதேச மற்றும் உள்ளுர் ஒருநாள் போட்டிகளை சேர்த்து) ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது.
இதற்கு முன்பு இதே தொடரில் பீகாருக்கு எதிரான ஆட்டத்தில் அருணாசலபிரதேச பவுலர் மிபோம் மோசு 116 ரன்களை வழங்கியதே மோசமான பவுலிங் சாதனையாக இருந்தது.