கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது. ஹசன் நவாஸ் 23 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் சல்மான் ஆஹர் 33 பந்தில் 38 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் ஹோல்டர் 19 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 134 ரன் இலக்கை கடைசி பந்தில் எடுத்தது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 14 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.