விளையாட்டு

அகில இந்திய ஹாக்கி நாளை தொடக்கம்: தமிழ்நாடு-மராட்டியம் முதல் ஆட்டத்தில் மோதல்

Published On 2025-07-09 11:47 IST   |   Update On 2025-07-09 11:47:00 IST
  • 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
  • சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைக்கும்.

சென்னை:

எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான 96-வது அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. சிறப்பு அழைப்பின் பேரில் மலேசியா ஜூனியர் அணி பங்கேற்கிறது.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக கிடைக்கும். சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.

தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு- மராட்டியம் (மாலை 4.15 மணி) அணிகளும், மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் கர்நாடகா-மத்திய நேரடி வரிகள் வாரியம் அணிகளும், மோதுகின்றன.

Tags:    

Similar News