விளையாட்டு
ரோகித் சர்மா

ஒரு அணிக்காக அதிக சிக்சர்- விராட் கோலி, டி வில்லியர்சுடன் இணைந்தார் ரோகித் சர்மா

Update: 2022-05-07 07:24 GMT
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையை ரோகித்சர்மா பெற்றார்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.லில் மும்பை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார். ஒரே அணிக்காக 200 சிக்சர் அடித்த 5வது வீரர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி, டி வில்லியர்ஸ், கிறிஸ்கெய்ல், பொல்லார்ட் ஆகியோருடன் அவர் இணைந்தார்.

ரோகித்சர்மா ஒட்டுமொத்தமாக ஐ.பி.எல்லில் 236 சிக்சர்கள் (218 ஆட்டம்) அடித்துள்ளார். அவர் டெக்கான் சார்ஜஸ் அணிக்காவும் விளையாடி இருந்தார்.
Tags:    

Similar News