விளையாட்டு

தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்

Published On 2026-01-29 22:28 IST   |   Update On 2026-01-29 22:28:00 IST
  • தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
  • இதில் இந்திய வீரர் தருண் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பாங்காக்:

தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய வீரர் தருண் மன்னேபல்லி, தைவானின் ஒய்.டிங் ஹங் உடன் மோதினார்.

முதல் செட்டை 21-17 என தருண் மன்னேபல்லி வென்றார். பதிலடியாக தைவான் வீரர் 2வது செட்டை 21-14 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை தருண் மன்னேபல்லி 24-22 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News