விளையாட்டு
பிரக்ஞானந்தா, மு.க.ஸ்டாலின்

கார்ல்சனை தோற்கடித்த பிரக்ஞானந்தா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

Published On 2022-02-22 10:55 IST   |   Update On 2022-02-22 11:18:00 IST
கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றியை வசமாக்கினார்.
சென்னை:

ஆன்லைன் மூலம் நடைபெற்ற  ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.

பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த  தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த சதுரங்க ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர்  ஆர்.பிரக்ஞானந்தாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Similar News