விளையாட்டு
மைக்கேல் கிளார்க் , ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷாவை பாராட்டும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

Published On 2022-02-04 02:40 IST   |   Update On 2022-02-04 02:40:00 IST
வீரேந்திர சேவாக்கைப் போன்ற ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா என்று மைக்கேல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் விளையாட்டு தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசியுள்ளதாவது:

அவர்(பிருத்வி ஷா) சேவாக்கைப் போன்ற ஒரு அற்புதமான வீரர். சேவாக் ஒரு மேதை, விளையாட்டை எப்போதும் அவர் முன்னோக்கி எடுத்துச் சென்வார். என்னைப் போன்றவர்களுக்கு, அந்த வகை கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். 

அவர் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன். அதனால்தான் சேவாக் எனக்கு மிகவும் பிடித்த வீரர்களில் ஒருவராக இருந்தார். பிருத்வி ஷா போன்று வீரர் மீது இந்தியா நம்பிக்கை வைத்திருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். 

இருப்பினும், பல்வேறு வடிவ கிரிகெட் விளையாட்டில் இந்தியாவிற்காக விளையாடும் போது அந்த இளைஞன் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணர்ந்திருப்பான். சர்வதேச கிரிக்கெட்டில் நிலைபெற அவருக்கு அதிக நேரம் தேவை. 

ஆஸ்திரேலியாவில் இது அவருக்கு முதல் வாய்ப்பு. அவர் எப்படி செல்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவருக்கு ஒவ்வொரு மாற்றமாக கொடுக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை தவற விட்டார்.

இது அவரது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், அவர் நன்றாக வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு மைக்கேல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

Similar News