விளையாட்டு
டி20-யில் 64 ரன்கள் வாரி வழங்கியபோது டோனி சொன்ன அறிவுரை: விவரிக்கிறார் சாஹல்
ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் உரையாடும்போது டோனி சொன்ன அறிவுரை குறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தற்போது விவரித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்பவர் சாஹல். இவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018-ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 64 ரன்கள் வாரி வழங்கினார்.
இந்த போட்டியில் 64 ரன்கள் கொடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை சாஹல் பதிவு செய்தார்.
இந்த நிலையில், அஸ்வின் உடன் சாஹல் உரையாடினார். அப்போது ரன்கள் விட்டுக்கொடுத்த விரக்தியில் இருந்தேன். அப்போது டோனி கூறியவார்த்தை ஆறுதல் அளித்தது என சாஹல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘ரன்கள் தொடர்ந்து கொடுத்திருந்த நிலையில், டோனி என்னிடம் வந்து நான் ஏதாவது செய்ய வேண்டுமா? என்று கேட்டார். நான் ஒன்றுமில்லை. சும்மா உங்களை பார்க்க வந்தேன் என்றேன்.
அதற்கு டோனி, இன்று உங்களுடைய நாள் அல்ல என்பது எனக்குத் தெரியும். நீங்கள் முயற்சி செய்தி கொண்டிருக்கிறீர்கள். அனால், அது நிகழவில்லை. அதைப்பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள். உங்களுடைய ஓவரை முடித்துவிட்டு கூலாக செல்லுங்கள்’’ என்றார்.
மேலும், ‘‘மற்றொருவராக இருந்து அந்த நேரத்தில் திட்டியிருந்தால், அதன்பின் இருக்கும் நம்பிக்கை அளவு மேலும் குறைந்துவிடும். ஆனால், அவர் என்னிடம் இது ஜஸ்ட் ஒரு போட்டி. ஒருநாள் போட்டியில் சிறப்பாக செய்வீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடியாது. மற்றவர்களுக்கும் இதுதான் என டோனி கூறினார்’’ என சாஹல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... புவனேஷ்வர்குமாரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது- சுனில் கவாஸ்கர்