விளையாட்டு
கொல்கத்தா அல்லது ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக இவருக்கு வாய்ப்புள்ளது: ஆகாஷ் சோப்ரா
ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில், எந்த வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ஐ.பி.எல். மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. 550-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தி இரண்டு அணிகள் உதயமாகியுள்ளது. ஒரு அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு அணியின் பெயர் வெளியாகவில்லை.
ஆனால் இரண்டு அணிகளும் கேப்டன் யார் என்பதை முடிவு செய்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மோர்கன் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா கொல்கத்தா அல்லது ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோப்ரா கூறுகையில் ‘‘ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது ஆர்.சி.பி. அணியின் கேப்டனாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. பஞ்சாப் அணி அவரை கேப்டனாக நியமிக்கும் என நான் நினைக்கவில்லை.
மேலும், மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடிய வீரராக இருப்பார். ஏனென்றால், இஷான் கிஷன் அந்த பட்டியலில் இல்லை. அவர் இருந்திருந்தால் கடும் போட்டி இருந்திருக்கும். இஷான் கிஷனுக்கு பணம் ஒதுக்குவார்கள். அய்யருக்காக பணத்தை வாரிக்கொட்டுவார்கள்.
ரபடா, டி காக், டேவிட் வார்னர் ஆகியோர் அதிக விலைக்கொடுத்து வாங்கக் கூடிய வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். அதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.
இதையும் படியுங்கள்... எனக்கு நான் எப்போதுமே கேப்டன்- விராட் கோலி சொல்கிறார்