விளையாட்டு
தன் காதலி மற்றும் குழந்தைகளுடன் ரொனால்டோ

உலகின் உயரமான கட்டிடத்தில் காதலியின் புகைப்படத்தை ஒளிர செய்த ரொனால்டோ

Published On 2022-01-30 17:55 IST   |   Update On 2022-01-30 17:55:00 IST
இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் வரை அவர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
துபாய்:

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது விடுமுறையை கொண்டாடி வருகிறார். இதற்காக அவர் தனது காதலியும் மாடலிங் நடிகையுமான ஜார்ஜினா ரோட்ரிக்சுடன் துபாயில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஜார்ஜினா தன்னுடைய பிறந்தநாளை கடந்த 27-ம் தேதி கொண்டாடினார்.

இதையடுத்து ஜார்ஜினாவுக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பிய ரொனால்டோ, துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 'ஹேப்பி பர்த்டே ஜியோ' என்ற வாசகத்துடன் ஜார்ஜினாவின் புகைப்படங்களை ஒளிரச்செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

இதற்காக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் வரை அவர் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதை படம்பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரொனால்டோ பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News