விளையாட்டு
ரோஹித், கோலி, ரவி சாஸ்திரி

களத்தில் ரோஹித்தை விட கோலி ஆக்ரோஷமானவர் - ரவிசாஸ்திரி பேட்டி

Published On 2022-01-26 18:37 GMT   |   Update On 2022-01-26 18:37 GMT
ஒரு வீரராக அதே ஆற்றலை வெளிப்படுத்தி விளையாடுவதே கோலிக்கு இப்போது உள்ள சவால் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரின் ஷோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு ரவி சாஸ்திரி அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: 

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் தற்போது இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய கிரிக்கெட் வீரர்கள். ஆடுகளத்தில் விராட் ஒரு மிருகத்தை போன்று ஆக்ரோஷமானவர்.  மைதானத்தில் நுழைந்தவுடன் தீவிரமாக அவர் விளையாட விரும்புகிறார், யாரை பற்றியும் கவலைப்படுவதில்லை. அவர் உணர்ச்சி வேகத்தில் இருப்பார். 

களத்திற்கு வெளியே, அவர் முற்றிலும் எதிர்மாறாக இருக்கிறார். கோலிக்கு இப்போது உள்ள சவால் என்பது, அணியின் கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக விளையாடும் போது அதே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப் படுத்துவதுதான்.  ஒரு வீரராக விளையாடுவதற்கும், ரன்களைப் பெறுவதற்கும், இந்தியாவின் வெற்றிக்கு உதவுவதற்கும் இன்னும் அவர் ஆற்றலுடன் இருக்க வேண்டும். அவர் அதைச் செய்தால், அவர் தமது கிரிக்கெட் வாழ்க்கையை முழுமையாக நிறைவு செய்வார். 

இந்திய ஒயிட்-பால் கேப்டன் ரோஹித் சர்மா தனது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார், இதன் விளைவாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவர் அணியை வழிநடத்த முடியும். இவ்வாறு சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News