செய்திகள்
ஆஸ்திரேலியா அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்
டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அபுதாபி:
20- ஓவர் உலக கோப்பை தொடரின் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. 2.1 ஓவரில் 30 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் எடுப்பதற்குள் (கெய்ல் 15, பூரன் 4, ரோஸ்டன் 0) 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பொல்லார்ட் 44 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.