செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணியினர்

ஹெட்மயர் போராட்டம் வீணானது - வெஸ்ட் இண்டீசை 20 ரன்களில் வீழ்த்தியது இலங்கை

Published On 2021-11-04 17:57 GMT   |   Update On 2021-11-04 17:57 GMT
இலங்கைக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ஹெட்மயர் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி 54 பந்தில் 4 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 81 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
அபுதாபி:

டி20 உலக கோப்பை தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய அசலங்கா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நிகோலஸ் பூரன் 46 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஹெட்மயர் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் இறுதிவரை போராடி 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இரண்டாவது வெற்றியை பெற்றது.
Tags:    

Similar News