செய்திகள்
சுமித் நகல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நகல்

Published On 2021-07-18 16:46 IST   |   Update On 2021-07-18 16:46:00 IST
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரும்பாலான வீரர்கள், ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியதால் சுமித் நகலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றனர். அவர்கள் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு, தற்போது ஜப்பான் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரரான சுமித் நகல், தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சுமித் நகல் உலகத் தரவரிசையில் தற்போது 154-வது இடத்தில் உள்ளனார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான காலக்கெடுவின்போது (ஜூன் 14-ந்தேதி) 144-வது தரவரிசையில் இருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் போடிக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரும்பாலான முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் சுமித் நகல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அனைத்து இந்திய டென்னிஸ் அசோசியேசன் சுமித் நகல் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றதை உறுதி செய்துள்ளது. ஆனால், டோக்கியோ செல்வாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான செய்தி வெளியாகவில்லை.

Similar News