செய்திகள்
ஸ்டீபன் பிளமிங்

2-வது கட்டமாக நியூசிலாந்து வீரர்கள் ஆக்லாந்து சென்றடைந்தனர்

Published On 2021-05-09 10:12 GMT   |   Update On 2021-05-09 10:12 GMT
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதால், வீரர்கள் சொந்த நாடு திரும்பி வரும் நிலையில், நியூசிலாந்து வீரர்கள் பலர் இன்று காலை ஆக்லாந்து சென்றடைந்தனர்.
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்கள், சொந்த நாடு திரும்ப முடிவு செய்தனர்.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்திற்கு தடைவிதித்தது. இதனால் வீரர்கள் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மற்றும் ஐபிஎல் அணிகள் வாடகை விமானங்களை ஏற்பாடு செய்து வெளிநாட்டு வீரர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறது. அந்த வகையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பயிற்சியாளர் மெக்கல்லம், சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், லூக்கி பெர்குசன், நடுவர் கிறிஸ் கஃபானி, வர்ணனையாளர்கள் சைடன் டவுல், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் இன்று காலை ஆக்லாந்து சென்றடைந்தனர்.

ஏற்கனவே டிரென்ட், போல்ட் ஆடம் மில்னே பின் ஆலன், ஜிம்மி நீஷம் ஆகியோர் சொந்த நாடு சென்றடைந்தனர்.  அவர்கள் டோக்கியோ வழியாக சொந்த நாடு சென்றடைந்தனர்.

நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்பேர்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக நியூசிலாந்தை சேர்ந்த கேன் வில்லியம்ஸ்சன், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜேமிசன், பிசியோ டாமி சிம்செக் ஆகியோர் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். முதலில் டெல்லியில் தங்கியிருந்து இங்கிலாந்து செல்வதாக இருந்தது. ஆனால் பயணத்தடை காரணமாக மாலத்தீவு சென்றடைந்துள்ளனர்.
Tags:    

Similar News