செய்திகள்
ரிஷப் பண்ட்

ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: ரிஷப் பண்ட் வெல்வாரா?

Published On 2021-02-02 10:25 GMT   |   Update On 2021-02-02 10:25 GMT
ஐசிசி அறிமுகம் செய்துள்ள ‘பிளேயர் ஆஃப் தி மந்த்’ விருதின் ஜனவரி மாதத்திற்கு ரிஷப் பண்ட் உள்பட 3 பேர் பெயரை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவிக்க முடிவு செய்தது. அதன்படி ஜனவரி மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார். சிட்னியில் நடைபெற்ற டெஸ்டின்  2-வது இன்னிங்சில் 97 ரன்களும், பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 89 ரன்களும் விளாசினர். இவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியை ருசித்தது. இதனால் ரிஷப் பண்ட் பெயரை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 228 ரன்களும், 2-வது டெஸ்டில் 186 ரன்களும் விளாசினார். இதனால் இங்கிலாந்து 2-0 என இலங்கையை வீழ்த்தியது. இலங்கை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால் ஜோ ரூட் பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.

அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டியில் 3 சதம் விளாசினார். இதனால் அவரது பெயரையும் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த மூன்று பேரில் ஒருவரை வோட்டிங் அகாடமி தேர்வு செய்யும். வோட்டிங் அகாடமியில் மூத்த பத்திரிகையாளர்கள், முன்னாள் வீரர்கள், ஒளிப்பரப்பாளர்கள், ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் உறுப்பினர்களில் சிலர் இடம் பிடிப்பார்கள். இவர்கள் மூன்றில் ஒருவரை தேர்வு செய்வார்கள்.
Tags:    

Similar News