செய்திகள்
க்ளென் பிலிப்ஸ்

2-வது டி20: 238 ரன்கள் விளாசி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது நியூசிலாந்து

Published On 2020-11-29 09:54 GMT   |   Update On 2020-11-29 09:54 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து 238 ரன்கள் குவித்து, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில் - செய்ஃபெர்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

கப்தில் 23 பந்தில் 34 ரன்களும், செய்ஃபெர்ட் 13 பந்தில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். நியூசிலாந்து அணி 6.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு கான்வே உடன் க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கான்வே ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 65 ரன்கள் அடித்தார். ஆனால் க்ளென் பிலிப்ஸ் 51 பந்தில் 108 ரன்கள் விளாசினார். இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 23 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது.

பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராண்டன் கிங் முதல் பந்திலேயே வெளியேறினார். பிளெட்சர் 20 ரன்னும், ஹெட்மையர் 25 ரன்னும், கைல் மேயர்ஸ் 20 ரன்களும், பூரன் 7 ரன்களும், பொல்லார்ட் 28 ரன்களும், கீமோ பால் 26 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களே அடித்தது.

இதனால் நியூசிலாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News