செய்திகள்
அரை சதமடித்த கில்

ஐபிஎல் கிரிக்கெட்- ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா

Published On 2020-09-26 17:42 GMT   |   Update On 2020-09-26 17:42 GMT
ஷுப்மான் கில் அதிரடியில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது கொல்கத்தா அணி.
அபுதாபி:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் 8-வது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர்கொண்டது.
 
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 36 ரன்னிலும், ஜான் பிரிஷ்டோ 5 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மனீஷ் பாண்டே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னிலும், சகா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டு இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ஆண்டே ரசல் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடினார்.

அவருக்கு இயான் மார்கன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரும் கொல்கத்தா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கொல்கத்தா அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 70 ரன்னும், மார்கன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News