செய்திகள்

சமூக வலைதளங்களில் கோலியை பின் தொடரும் 10 கோடி ரசிகர்கள்

Published On 2019-05-20 11:38 IST   |   Update On 2019-05-20 11:38:00 IST
சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. கிரிக்கெட் வீரர்களில் புதிய சாதனையை அவர் பெற்றுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) கேப்டனாக வீராட்கோலி இருக்கிறார்.

அபாரமான ஆட்டம் மூலம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இதன் காரணமாக வீராட்கோலி ஏராளமான ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றுள்ளார். அவர் தன்னை பற்றிய செய்தி, படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப் போது பதிவிடுவார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வீராட்கோலியை 10 கோடி ரசிகர்கள் பின் தொடர்வது தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் 10 கோடிக்கு மேலாக பின்பற்றப்படும் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார்.

இன்ஸ்டா கிராமில் 3.36 கோடி பேரும், பேஸ்புக்கில் 3.7 கோடி பேரும், டுவிட்டரில் 3.7 கோடி பேர் என மொத்தம் 10 கோடி பேர் கோலியை பின் தொடர்கிறார்கள்.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை (போர்ச் சுக்கல்) இன்ஸ்டாகிராமில் மட்டும் 16.7 கோடி பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறப்பிடத்தக்கது.

Tags:    

Similar News