செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் கெத்து காட்டிய ஸ்டீவ் ஸ்மித்: டேவிட் வார்னர் ஏமாற்றம்

Published On 2019-05-10 13:25 GMT   |   Update On 2019-05-10 13:25 GMT
உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி ஸ்டீவ் ஸ்மித் கெத்து காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவருக்கும் ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்ததால், இருவரும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்ததால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தனர்.

தற்போது உலகக்கோப்பைக்கு தயாராக நியூசிலாந்தை ஆஸ்திரேலியா வரவழைத்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம். நடைபெற்ற 2-வது போட்டியில் 89 ரன்கள் அடித்த ஸ்மித், இன்றைய 3-வது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்துள்ளார்.



ஆனால் வார்னர் முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்தார். 2-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆன அவர், இன்றைய போட்டியில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்தது. பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால்  Duckworth/Lewis/Stern விதிப்படி ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News