செய்திகள்

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: வார்னர் டக், ஸ்மித் 89 ரன் விளாசல்

Published On 2019-05-08 11:31 GMT   |   Update On 2019-05-08 11:31 GMT
நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேவிட் வார்னர் டக்அவுட் ஆகிய நிலையில், ஸ்மித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் விளாசினார். #CWC2019
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர். இருவரும் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இந்தத்தடை தற்போது முடிவடைந்ததால், உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் இருவரும் களம் இறங்கினர். 3-வது வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 39 ரன்கள் சேர்த்தார். அடுத்து களம் இறங்கிய ஸ்மித் 22 ரன்கள் சேர்த்தார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் சேர்த்த டேவிட் வார்னர் டக்அவுட் ஆனார். ஆனால் ஸ்மித் சிறப்பாக விளையாடி 77 பந்தில் 89 ரன்கள் குவித்தார். உஸ்மான் கவாஜா 56 ரன்களும், மேக்ஸ்வெல் 52 ரன்களும் சேர்த்தனர்.

காயம் குணமாகி அணிக்கு திரும்பிய மிட்செல் ஸ்டார்க் ஐந்து ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News