செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் : ரகமத் ஷாவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 314 ரன்கள் குவித்தது

Published On 2019-03-16 12:40 GMT   |   Update On 2019-03-16 12:40 GMT
டேராடூனில் நடைபெற்று வரும் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரகமத் ஷாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்துள்ளது. #AFGvIRE
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் சிக்கிய அயர்லாந்து விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. இறுதியில் விளையாடிய டாக்ரெல், முர்டாக் ஜோடி சிறப்பாக விளையாடியது. முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 172 ரன்னில் சுருண்டது. முர்டாக் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அகமத்சாய், முகமது நபி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் வக்கார் சலாம்கெய்ல் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், இசனுல்லா ஜனாத்
இறங்கினர்.

ஜனாத் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரகமத் ஷா நிதானமாக விளையாடினார். ஷசாத் 40 ரன்னில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷஹிதியும் பொறுப்புடன் ஆடினார், இருவரும் அரை சதமடித்தனர். ஷஹிதி 61 ரன்னிலும், அஸ்கர் ஆப்கான் 67 ரன்னிலும் வெளியேறினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகமத் ஷா 98 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து ஆடவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அயர்லாந்து தரப்பில் ஸ்டூவர்ட் தாம்சன் 3 விக்கெட்டும், ஆண்டி மெக்பிரின், ஜேம்ஸ் கேமரூன் டவ், ஜார்ஜ் டாக்ரெலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. #AFGvIRE
Tags:    

Similar News