செய்திகள்

நியூசிலாந்து வீரர் டெய்லர் புதிய சாதனை - பிளெமிங்கை முந்தினார்

Published On 2019-02-20 08:19 GMT   |   Update On 2019-02-20 08:19 GMT
வங்காளதேச அணிக்கெதிரான கடைசி ஆட்டத்தில் ரோஸ் டெய்லர் 69 ரன்கள் எடுத்த நிலையில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
டுனிடின்:

வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 69 ரன்னும், நிக்கோலஸ் 64 ரன்னும், தற்காலிக கேப்டன் டாம்லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 242 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றுகிறது.

இந்த ஆட்டத்தில் டெய்லர் 43-வது ரன்னை எடுத்தபோது 8 ஆயிரம் ரன்னை தொட்டார். ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

51-வது ரன்னை எடுத்த போது ஒருநாள் ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டெய்லர் படைத்தார். அவர் ஸ்டீபன் பிளெமிங்கை முந்தி முதல் இடத்தை பிடித்தார்.



34 வயதான டெய்லர் 218 ஒருநாள் போட்டி, 203 இன்னிங்சில் விளையாடி 8026 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.34 ஆகும். இதில் 20 சதமும், 47 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 181 ரன் குவித்துள்ளார்.

பிளெமிங் 279 போட்டியில் 268 இன்னிங்சில் ஆடி 8007 ரன் எடுத்துள்ளார். சராசரி 32.41 ஆகும். 8 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 134 ரன் எடுத்துள்ளார். #NZvBAN #RossTaylor #StephenFleming
Tags:    

Similar News