செய்திகள்

இந்தியாவிற்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்- சதத்தை தவறவிட்டார் ஷாய் ஹோப்

Published On 2018-10-27 12:11 GMT   |   Update On 2018-10-27 12:11 GMT
புனேயில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அஹமது சேர்க்கப்பட்டனர். உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

கியெரன் பொவேல், சந்த்ரபால் ஹெம்ராஜ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹெம்ராஜ் 15 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். பொவேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த விக்கெட்டையும் பும்ராதான் வீழ்த்தினார்.

3-வது நபராக களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த சாமுவேல்ஸ் 9 ரன்னில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஷிம்ரோன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது போட்டியில் விளையாடியது போல் அபாரமாக விளையாடியது. ஹெட்மையர் 21 பந்தில் 3 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்திருக்கும்போது டோனியால் ஸ்டம்பிங் செய்து வெளியேற்றப்பட்டார்.



ஹெட்மையர் அவுட்டால் இந்தியா நிம்மதி அடைந்தது. அடுத்து வந்த ரோவ்மேன் பொவேல் 4 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் ஷாய் ஹோப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அரைசதம் அடித்த ஷாய் ஹோப் சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்

ஹோல்டர் 32 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஷாய் ஹோப் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ராவின் நேர்த்தியான யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார்.

9-வது வீரராக களம் இறங்கிய நர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் 270 ரன்களை தாண்டியது. புவனேஸ்வர் குமார் வீசிய 49-வது ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகள் தூக்கினார். கடைசி ஓவரை பும்ரா வீசினார். 5-வது பந்தில் நர்ஸ் ஆட்டமிழந்தார். நர்ஸ் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் ரன்ஏதும் எடுக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் சேர்த்தது.



இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக நாக்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
Tags:    

Similar News