செய்திகள்

டெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்த உமேஷ் யாதவ், பிரித்வி ஷா, ரிஷப் பந்த்

Published On 2018-10-15 10:39 GMT   |   Update On 2018-10-15 10:39 GMT
டெஸ்ட் போட்டியில் அசத்திய இளம் வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பேட்ஸ்மேன் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர். #Prithvishaw
இங்கிலாந்து தொடரின்போது இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் அணியில் அறிமுகமானார். கடைசி டெஸ்டில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ராஜ்கோட் மற்றும் ஐதராபாத் டெஸ்டில் இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

மற்றொரு இளம் வீரரான பிரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். தொடக்க வீரரான பிரித்வி ஷா ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஐதராபாத் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும் விளாசினார். இரண்டு டெஸ்டிலும் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.



ஐதராபாத் டெஸ்டில் வேகப்பந்தில் தனி ஒருவராக நின்று அபாரமாக பந்து வீசி 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இந்த மூன்று பேரும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

ராஜ்கோட் டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி ஷா 73-வது இடத்தை பிடித்திருந்தார். ஐதராபாத் டெஸ்டில் (70, 33 நாட்அவுட்) சிறப்பான விளையாடியதன் மூலம் 60-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் ரிஷப் பந்த் 111-வது இடத்தில் இருந்தார். தற்போது இரண்டு இன்னிங்சிலும் தலா 92 ரன்கள் அடிக்க தற்போது 62-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.



ஐதராபாத் டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 29-வது இடத்தில் இருந்து 25-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா, முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முதல் 25 இடத்திற்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News