செய்திகள்

23 சிக்சர்களுடன் 257 ரன்கள் குவிப்பு - 50 ஓவர் போட்டி வரலாற்றில் 3-ம் இடத்தை பிடித்த ஆஸி. வீரர்

Published On 2018-09-28 05:07 GMT   |   Update On 2018-09-28 05:07 GMT
உள்ளூர் ஒருநாள் தொடரில் 257 ரன்கள் குவித்த டி ஆர்சி ஷார்ட், 50 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரையும், உலக அளவில் 3-வது வீரர் என்ற பெயரையும் படைத்துள்ளார். #AustraliaCricket #DArcyShort #WAvQL
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான 50 ஓவர் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. மேற்கு ஆஸ்திரேலியா - குயின்ஸ்லாந்து அணிகள் இன்று மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கு ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய டி ஆர்சி ஷார்ட், 148 பந்துகளில் 23 சிக்சர்கள் விளாசி 257 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 50 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தையும் அவர் பிடித்துள்ளார்.

கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள குயின்ஸ்லாந்து அணி 25 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Tags:    

Similar News