null
சோதனை மேல் சோதனை!.. விஜய்யின் 'தெறி' ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு - ஏன்?
- இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9 வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
எனவே தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சூழலில் தயாரிப்பாளர் தாணு இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், "வரவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க , 'தெறி' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்." என்று அறிவித்துள்ளார்.
ஜன நாயன் ரிலீஸ் தள்ளிபோனதால், கார்த்தியின் வா வாத்தியார், ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில், திரௌபதி 2 ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிவகார்திகேயனின் பராசக்தி கடந்த ஜனவரி 9 முதல் திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.