என் மலர்
சினிமா செய்திகள்

இதெல்லாம் என்கிட்ட கேட்டா, எனக்கு என்ன தெரியும்... ஜன நாயகன் சென்சார் குறித்த கேள்விக்கு விமல் பதில்
- 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை
- இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 19 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்காததால் அறிவித்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் 19 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
இதனிடையே, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் சென்சார் விவகாரம் குறித்து நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விமல், "இதெல்லாம் என்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன தெரியும். நான் பதில் சொல்ற மாதிரியான கேள்வியா கேளுங்க" என்று தெரிவித்தார்.
Next Story






