செய்திகள்

ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? தோனி விளக்கம்

Published On 2018-09-13 13:45 GMT   |   Update On 2018-09-13 14:58 GMT
இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்?, சமீபத்திய டெஸ்ட் தோல்வி ஆகியவை குறித்து எம்.எஸ் தோனி பேசியுள்ளார். #MSDhoni #TeamIndia
ராஞ்சி:

இந்திய கிரிக்கெட் ஒருநாள் போட்டி கேப்டனாக தோனி இருந்த கால கட்டத்தில் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி ஆகியவற்றை இந்திய அணி வென்றது. 2017-ம் ஆண்டு ஜனவரியில் திடீரென ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 

மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு அணியின் முன்னேற்றத்துக்கு அவர் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்தது.

இந்நிலையில், ராஞ்சியில் ஒரு விழாவில் பேசிய போது இதைப் பற்றி கூறியுள்ளார். "எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் விலகினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

“புதிய கேப்டன் சரியான நேரத்தை வழங்காமல் ஒரு வலுவான அணியை தேர்வு செய்வது சாத்தியமில்லை. நான் சரியான நேரத்தில் கேப்டனியை விட்டுவிட்டேன் என்று நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் 4-1 தோல்வி குறித்து பேசிய அவர், “இந்திய அணி ஒரு தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவதை தவறவிட்டது. அதனால் தான் வீரர்கள் கடினமான நேரத்தில் தடுமாறுகின்றனர். எனினும், தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்தியா தற்போது தரவரிசையில் முதலிடம் வகிக்கிறது என்று நாம் மறந்துவிடக் கூடாது” என தோனி பேசினார். 
Tags:    

Similar News