செய்திகள்

குறைந்த வயதில் சதமடித்து சாதனை படைத்த ரிஷப் பந்த்

Published On 2018-09-11 22:34 GMT   |   Update On 2018-09-11 22:34 GMT
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் குறைந்த வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பந்த். #ENGvIND #RishabhPant
லண்டன்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 464 என்ற கடின வெற்றி இலக்குடன் இந்திய அணி 2-ஆவது இன்னிங்சில் விளையாடியது. 

5-ஆம் நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுலுடன் கை கோர்த்தார் ரிஷப் பந்த். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
  
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சதமடித்தார். சர்வதேச அரங்கில் அவர் சதமடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இணைந்தார் ரிஷப் பண்ட்.

மேலும், டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை சிக்சருடன் பூர்த்தி செய்த இந்தியர்கள் வரிசையிலும் சேர்ந்து கொண்டார். கபில்தேவ், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங்குடன் நிணைந்தார்.



மிகவும் குறைந்த வயதில் சதமடித்த இளம் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அஜய் ராத்ராவை தொடர்ந்து இரண்டாவதாக இடம் பிடித்து அசத்தினார்.
 
மற்றொரு சாதனையாக, டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பரில் முதலிடம் பிடித்தும் அசத்தியுள்ளார். (100* ரிஷப் பண்ட்).

தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையையும் படைத்தார். #ENGvIND #RishabhPant
Tags:    

Similar News