செய்திகள்

ஒரு பால்.. ஒரு ரன் - சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்த நேபாளம்

Published On 2018-08-05 03:13 GMT   |   Update On 2018-08-05 03:13 GMT
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. #NEDvNEP #NepalCricket

கடந்த மார்ச் மாதம் நேபாளம் அணி சர்வதேச அணிக்கான அந்தஸ்தை பெற்றது. இதன் பின்னர் முதன் முறையாக அந்த அணி நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் ஒரு நாள் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 216 ரன்கள் எடுத்தது. சோம்பால் காமி 51, கேப்டன் பராஸ் காட்கா 51 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் ஒரு ரன்னில் நேபாளம் வென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் நெதர்லாந்து இருந்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பவுலிங் செய்த பராஸ் காட்கா, நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை ரன் அவுட்டாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டி வெற்றியை நேபாளம் பதிவு செய்துள்ளது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற தொடர் சமனானது.
Tags:    

Similar News