செய்திகள்

இந்தியா ஏ அணி 197 ரன்னில் சுருண்டது- ரிஷப் பந்த் 58, ரகானே 49

Published On 2018-07-18 13:21 GMT   |   Update On 2018-07-18 13:21 GMT
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி 197 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ரிஷப் பந்த், ரகானே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். ENGvIND
இங்கிலாந்து லயன்ஸ் - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் வொர்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. 16-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்சில் 423 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் அலஸ்டைர் குக் 180 ரன்களும், கப்பின்ஸ் 73 ரன்களும், தாவித் மலன் 74 ரன்களும் குவித்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சராஜ் 4 விக்கெட்டும், நதீம் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா ‘ஏ’ அணி பேட்டிங்கை தொடங்கியது. பிரித்வி ஷா, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயாங்க் அகர்வால் ரன்ஏதும் எடுக்காமலும், கருண் நாயர் 4 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.



அடுத்து பிரித்வி ஷா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த பிரித்வி ஷா 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ரிஷப் பந்த் உடன் ஜோடி சேர்ந்தார். நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ‘ஏ’ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 26 ரன்களுடனும், ரிஷப் பந்த் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானே 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் அரைசதம் அடித்து 58 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா ஏ அணி 197 ரன்னில் சுருண்டது. சாம் குர்ரான் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
Tags:    

Similar News