செய்திகள்

காலிறுதியில் வெளியேறியது எனது கால்பந்து வாழ்க்கையில் சோகமான தருணம்- நெய்மர் வேதனை

Published On 2018-07-08 13:25 GMT   |   Update On 2018-07-08 13:25 GMT
காலிறுதியில் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவும் சோகமான தருணம் என நெய்மர் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார். #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. காலிறுதி ஒன்றில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நெய்மர், கவுட்டினோ, மார்சிலோ, வில்லியன் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்ட பிரேசில் 1-2 என பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பிரேசில் வீரர்கள் சோகம் நிறைந்த முகத்துடன் சொந்த நாடு திரும்பினார்கள். இந்நிலையில் பெல்ஜியத்திடம் 1-2 எனத் தோல்வியடைந்தது எனது கால்பந்து வாழ்க்கையில் மிகவம் சோகமான தருணம் என்று நெய்மர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.



பெல்ஜியத்திற்கு எதிரான தோல்வி குறித்து நெய்மர் கூறுகையில் ‘‘எனது கால்பந்து வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம் என்பதை என்னால் கூற முடியும். இதன் வழி மிகவும் அதிகமானது. ஏனென்றால், உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைக்க வாய்ப்பு இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பு அமையவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News