கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு வழிபாடு நடத்தினால் எப்படி?.. கறார் காட்டிய உச்சநீதிமன்றம்
- பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
- கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பங்கி பிஹாரிஜி மகாராஜ் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தரிசன நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இதை விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் வழக்கறிஞர் தன்வி துபே ஆகியோர், பங்கி பிஹாரிஜி கோவிலில் தரிசன நேரங்களில் மட்டுமல்ல, பல மத வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மரபின்படி, கடவுளுக்கு ஓய்வு நேரங்கள் உண்டு, ஆனால் அந்த நேரங்களிலும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது என்று கூறினர்.
இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?. பழங்கால விதிகள், நடைமுறைகள் மற்றும் தரிசன நேரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க உயர்மட்ட கோயில் நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.