null
இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த மம்தா: பாதியிலேயே கோபத்துடன் வெளியேறினார்
- SIR-ஐ மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்த்து வருகிறார்.
- இன்று தலைமை தேர்தல் ஆணையர் சந்தித்து பிரச்சனைகளை எடுத்துரைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR பணியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். SIR நடவடிக்கைக்கு பயந்து பலர் தற்கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். அத்துடன் SIR பாஜக உருவாக்கிய செயலியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்களை சந்தித்தனர்.
இவர்களை சந்தித்த பிறகு, மம்தா பானர்ஜி கடுங்கோபத்துடன் வெளியேறினார். வெளியில் வந்த அவர், தேர்தல் ஆணையம் பாஜக-வுக்கு இடைத்தரராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையருடன் பேசிக் கொண்டிருந்த மம்தா பானர்ஜி, திடீரென கோபத்துடன் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
சட்டத்தின் ஆட்சி வெல்லும். சட்டத்தை கையில் எடுக்கும் எவரும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய சட்டம் மற்றும் அதிகாரத்தின்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்து.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியது முறையாக குறித்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்தின்போது பலமுறை இடைமறித்து பேசினர். பின்னர் மம்தா பானர்ஜி கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கோபத்துடன் வெளியேறினார் எனத் தெரிவித்துள்ளது.