3 குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய்: கர்நாடகாவில் பரிதாபம்
- கணவர் மற்றும் மாமியாருடன் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
- இதனால் விரக்தியான பெண், 3 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 28 வயது பெண், தனது 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்து தானும் விசம் அருந்து தற்கொலைக்கு முயன்ற சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் பதாமி தாலுகாவில் உள்ள கிராமம் ஹிரேமுச்சல்குட்டா கிராமம். இந்த கிராமத்தில் ரூபா ஹனுமன்த் கவுடர் (வயது 28) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு 5, 4, மற்றும் 2 இரண்டு வயதில் மூன்று குழந்கைள் இருந்தன.
இவருக்கும் இவரது கணவர் மற்றும் மாமியாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடைபெறு வழக்கம். சம்பவத்தன்று இந்த சண்டை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த சண்டையால் விரக்தியான ரூபா தனது குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி மூன்று குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தூக்கில் போட்டு கொன்றுள்ளார். அதன்பின் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விசம் அருந்தியுள்ளார். ஆனால், ரூபா உயிர்ப்போகவில்லை.
உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.