null
MGNREGA: மகாத்மா காந்தி பெயரை நீக்கும் முடிவு - சசி தரூர் என்ன சொன்னார் தெரியுமா?
- கிராம சுயராஜ்ஜியமும் ராம ராஜ்ஜியமும் காந்திஜியின் கனவின் இரண்டு தூண்கள்.
- அவரது கடைசி வார்த்தை 'ராம்'.
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்பதை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேருவை தொடர்நது காந்தி மீது பாஜக வெறுப்பை உமிழ்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த பெயர் மாற்றத்தால் என்ன பயன், மேலும் அரசு நிதியை வீணடிக்கும் செயல் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். நாட்டின் மனசாட்சியில் இருந்து காந்தியை அகற்ற துடிக்கும் மோடி மற்றும் பாஜகவின் செயல்திட்டத்தின் ஒரு பகுதி இது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வாதிட்டார்.
இந்நிலையில் அணமைக் காலங்களாக பிரதமர் மோடி மற்றும் பாஜகவை புகழ்ந்து வரும் திருவனானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இந்த பெயர் மாற்றம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "கிராம சுயராஜ்ஜியமும் ராம ராஜ்ஜியமும் காந்திஜியின் கனவின் இரண்டு தூண்கள். அவற்றுக்கிடையே ஒருபோதும் மோதல் இல்லை.
கிராமப்புற ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திலிருந்து மகாத்மாவின் பெயரை நீக்கி அவரது மரபை அவமதிக்காதீர்கள். அவரது கடைசி வார்த்தை 'ராம்'.
தேவையில்லாமல் ஒரு சர்ச்சையை உருவாக்கி அவரது ஆன்மாவை சேதப்படுத்தாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.